மோடி ஒரு இளைஞர் போல் செயற்பட்டார் ;பியர் கிரில்ஸ்

மோடி ஒரு இளைஞர் போல் காட்டில் வாழ்ந்தார் என டிஸ்கவரி தொலைக்காட்சி மேன் vs வைல்ட் நிகழ்ச்சி  தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ள  மேன் vs வைல்ட் நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகவுள்ள நிலையில், மோடியுடனான பயணம் குறித்து பியர் கிரில்ஸ் ஏஎன்ஐ ஊடகத்துக்குப் நேர்காணல் வழங்கியுள்ளார்

அதில் மோடியுடன் பயணித்தது குறித்து பேசும்போது , ”பிரதமர் மோடியைப் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவருடன் நிகழ்ச்சி நடத்தக் கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ”பிரதமர் மோடி சுற்றுச்சூழலைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்ட மனிதர். அதனால்தான் அவர் என்னுடன் பயணம் மேற்கொண்டார். அவர் உண்மையில் ஒரு இளைஞர் போல் காட்டில் நேரத்தைச் செலவிட்டார், அங்கு அவர் எவ்வளவு அமைதியாக இருந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது, என்றார்/

No comments