இருவர் அமைச்சுக்களை ஏற்றனர் - ஹரீஷ் விடாப்பிடி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மௌலானா மற்றும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஐக்கிய தேசிய முன்னணி) உறுப்பினர் பைஸல் காசிம் ஆகியோர் மீண்டும் தமது இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை இன்று (23) பாெறுப்பேற்றுக் காெண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றபோது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு பதவியேற்றனர்.
இருப்பினும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஐக்கிய தேசிய முன்னணி) நாடாளுமன்ற எச்.எம்.எம் ஹரீஸ் தான் மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை உடனடியாக ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

No comments