வாக்குகளை பெற்றுக் கொள்ள மனோ கணேசன் உதவிகளை செய்யவில்லை - கூறுவது யார்?

வட, கிழக்கில் அமைச்சர் மனோ கணேசன் வாக்குகளை பெறுவதற்காக உதவி செய்யவில்லை. சிறுபான்மை மக்களின் கஷ்டங்களை நீக்கவே உதவி செய்கின்றார் என தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் கே.கோபிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நொச்சிமுனை மகளீர் செயல்பாட்டு அமைப்பினருக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு அமைப்பின் கட்டடத்தில் இன்று (11) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட கிழக்கிலே பல கட்சிகள் வருகிறது. இதில் சில கட்சிகள் காரியாலயங்கள் திறக்கின்றார்கள், அதில் அங்கத்துவம் வழங்குகிறார்கள். ஆனால் அமைச்சர் மனோ கணேசன் மக்களின் குறையை கேட்டு உதவி செய்கிறார். அதிலும் பாடசாலைகளை கட்டி கொடுக்கிறார், தமிழர்களின் கல்வியை வளர்ப்பதற்காகவும், ஆலயங்களை புனரமைப்பதற்கு, பாலர் பாடசாலை என பல அபிவிருத்திகளை மேற்கொள்கிறார்.

கடந்த வருடம் தென்கிழக்கு பல்கலைக் கழகத்திலே பொறியியலாளர் படிப்பினை முடித்து நேர்முக பரீட்சைக்கு சென்ற 15 மாணவர்கள் பல்கலைக் கழகத்தினால் அங்கத்துவம் கொடுக்காமையினால் விடுபட்டார்கள். எல்லா அரசியல்வாதிகளிடமும் சென்று செய்ய முடியாததை அமைச்சர் மனோ கணேசன் அழைத்து சென்று, உரிய அதிகாரிகளுடன் கதைத்து ஒன்றரை மாதத்துக்குள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை பகுதியை சேர்ந்த 15 பொறியியலாளர்களை உருவாக்கினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், அமைச்சர் மனோ கணேசன் வடகிழக்கிற்கு அபிவிருத்தியை மேற்கொள்வதை கண்டு தனது, இயலாமை, அறிவு இன்மை, முயற்சி இன்மை, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய மனமின்மை என்பவற்றை திருத்தி கொள்ளவேண்டும், சைக்கிளில் பயணிக்க முதல் டயரில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும்.

அமைச்சர் மனோக ணேசன் அரசியலுக்காக மக்களுக்கு சேவை செய்பவர் அல்ல. அவர் சிறுபான்மை மக்களின் கஷ்டங்களை தன்னுடைய கஷ்டம் போன்று புரிந்து கொண்டு பல சேவைகளை நேரடியாக செய்து வருகின்றார். என்றார்.

No comments