கோத்தாவை சந்தித்த வழுதி?


கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கு முன்னர் பல வழிகளில் அமெரிக்கா அவரை வேவு பார்த்துள்ளது.அதன் ஒரு கட்டமாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தனது ஆலோசகரான வழுதி என்றழைக்கப்படும் நபர் சகிதம் கோத்தபாயவை சந்தித்தமை அம்பலமாகியுள்ளது.

இறுதி யுத்த காலத்தில் அமெரிக்க உளவு கட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு போரை முடிவுக்கு கொண்டுவர உதவியதாக அடையாளப்படுத்தப்பட்ட வழுதி எனும் குறித்த நபர் கோத்தாவுடனான சித்தார்த்தனின் சந்திப்பில் பங்கெடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே அமெரிக்க பதில் ராஜாங்க செயலர் அலைஸ் வெல்ஸ், எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தயாராக இருந்த நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments