பெண்களே அஞ்சாதீர்கள் நான் இருக்கிறேன்; மஹிந்தர்

"பெண்களின் துன்ப துயரங்களை அறிந்த ஒரே அரசாங்கம் எமது அரசாங்கம்" என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி தான் தோல்வியடைந்தது தொடர்பில் அதிகமாக வருத்தப்பட்டது பெண்களே.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பல மாதங்களுக்கு தங்காலையில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்த பெருந்திரளான மக்களில் அதிகளவில் இருந்தது பெண்களே. பெண்களின் நெஞ்சில் எரியும் தீ தொடர்பில் நன்கு அறிந்த ஒரே அரசாங்கம் எமது அரசாங்கம்.

எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது, கடந்த 2015 ஜனவரி 9 ஆம் திகதி இந்நாட்டின் பெண்களின் முகத்தில் இருந்த சோகமான உணர்வு. அன்று இந்நாட்டில் இடம்பெற்ற மாற்றத்திற்கு அதிகளவில் வருத்தப்பட்டது பெண்கள். அது மட்டுமில்லை, ஜனவரி 8 ஆம் திகதி முதல் சில மாதங்களுக்கு தங்காலையில் அமைந்துள்ள வீட்டிற்கு பெருந்திரளான மக்கள் வந்தனர். அங்கு வந்த மக்களில் அதிகளவில் இருந்தது பெண்கள். அம்மாமார்கள், சகோதரிகள், பெண் பிள்ளைகள்.

நாம் தேர்தலில் தோல்வியடைந்த போதும், மக்கள் மனங்களில் இருந்து நீங்கவில்லை என எமக்கு எடுத்துரைத்தது பெண்கள். எம்மை தனிமை படுத்த யாராலும் முடியாது. நாம் தனிமைப்படுத்தப் படவில்லை என்ற உணர்வை எமக்கு கொடுத்தது இந்நாட்டு பெண்கள். இந்நாட்டு பெண்களின் நெஞ்சில் எரிந்த தீயை எமது அரசாங்கம் அணைத்தது. எனினும், கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எமது பெண்கள் மீண்டும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். பயப்பட வேண்டாம், நாங்கள் இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments