இரு பிள்ளைகளின் தந்தைய பலியெடுத்த மண் சரிவு

நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் இன்று (14) காலை வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்படி நபர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் மண்சரிவுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments