பாலியாற்று மணலையும் விட்டுவைக்காத சாந்தி?


கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் கணவரது வழிநடத்தலில் பாலியாற்றினில் சட்டவிரோத மணல் அகழ்வு நடப்பது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே காடழித்து மகனிற்கு காணி பிடித்த விவகாரம் சாந்தி சிறீஸ்கந்தராசா தனது சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுடன் மோதி வருகின்றார்.

இதனிடையே குடும்பம் என்ற நிலையில் கணவர் மேற்கொள்ளும் சில விடயங்களுக்கு மனைவி என்ற அடிப்படையில் காணியினை பிடித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

தற்போது அவரது கணவரே காணியை; பராமரித்தும் வருகின்றார். முற்றுமுழுதாக கணவரது கட்டுப்பாட்டிலேயே இருந்துவரும் அவர் கணவரது ஆலோசனைகளை பெற்றே செயற்பட்டும் வருகின்றார்.

இந்நிலையில் வன்னியினில் பெருமெடுப்பில் நடைபெறும் பாலியாற்று மணல் அகழ்வில் சாந்தியின் கணவர் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

இதனிடையே சாந்திக்கும் சிவமோகனிற்குமிடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர தமிழரசுக்கட்சி தலைமை குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments