ஏட்டிக்குப்போட்டி:கோத்தாவும் விருந்து?


ரணிலை தொடர்ந்து கோத்தாவும் இரவு நேர விருந்துகளிற்கு அழைப்பு விடுக்க தொடங்கியுள்ளார்.
இதனிடையே கோத்தாவின் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்ட சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் பங்கெடுக்காமல் பதுங்க தொடங்கியுள்ளனர்.
கோட்டாபயவின் இரவு விருந்துக்கு செல்லாமைக்கு பிரதான காரணம் பொதுஜன பெரமுனவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையே என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ வழங்கிய இராப்போசன விருந்திற்கான அழைப்பு கிடைக்கப் பெற்றிருந்தது. இருப்பினும், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள கட்சியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருகின்றது.
அதில் தீர்மானம் ஒன்று வராத நிலையில் அவரது விருந்தில் கலந்துகொள்வது கட்சி ரீதியில் தவறு என்று நான் கருத்துகின்றேன். இதனாலேயே அவ்விருந்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் மகனின் திருமண வைபவத்தில் நிச்சயம் கலந்துகொள்வேன் எனவும், அதற்கும் இந்த அரசியல் கட்சி நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments