முஸ்லிம் எம்பிகள் இருவருக்கு அமைச்சுப் பதவி!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தாங்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை பதவி விலக வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்ட உணவுத் தவிர்ப்பு போராட்டத்தின் பின்னர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.

அதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்களான கபீர் ஹசீம் மற்றும் எம்.எச்.ஏ.அலீம், ரிசாட் பதியுதீன் மற்றும் ரவுஃப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் தங்களது பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று பைசல் காசிம் மற்றும் அலி சாஹீர் மௌலானா ஆகியோர் தங்களது அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

No comments