கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறி 9 வயது இந்திய சிறுவன் சாதனை!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறி இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா சாதனை படைத்துள்ளான்.
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரம் உள்ளது. இந்த சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிகரத்தின் மீது 9 வயது இந்திய சிறுவன் அத்வைத் பார்தியா கடந்த 31-ம் தேதி ஏறி சாதனை படைத்துள்ளான். இவனது பூர்விகம், மராட்டிய மாநிலம் புனே ஆகும். 2016-ம் ஆண்டில் 6 வயதாக இருந்த போது, அத்வைத் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு ஏறி சாதனை படைத்துள்ளான். அடுத்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான எல்ப்ரஸ் சிகரம் ஏற அத்வைத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments