கோர விபத்தில் மூவர் பலியாகினர்

தம்புள்ள - ஹபரண வீதியின் குடாமீகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் குறித்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

No comments