இந்தியாவுக்குள் திமுக, உலக அரங்கில் பாகிஸ்தான்!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டாக பிரித்ததற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்னையை  சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக கூறுகிறது.


 இந்தியாவின் தன்னிச்சையான  செயல்ப்பட்டுக்கு வர்த்தகம்  மற்றும் போக்குவரத்து தொடர்புகளை துண்டித்து, இந்தியாவின் தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஐநாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசென்றது, அங்கு பாகிஸ்தானும் சீனாவும் மட்டுமே இந்தியாவுக்கு எதிராக இருந்தது , அனைத்து நாடுகளும் ஐநா சபையும் இது உள்நாடு பிரச்சனை என்று விவாதத்தை முடித்துவிட்டது , இந்நிலையிலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்த பிரச்னையை சூடாக வைத்திருக்க சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றது.

காஷ்மீரை இரண்டாக பிரித்து சட்டத்தை இயற்றி அதை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது , அனால் இந்தியாவில் திமுக தொடர்ந்தும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது , இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் திமுக மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 22ம் தேதி போராட்டம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் , தொடர்ந்தும் இந்த பிரச்சனையல் பாகிஸ்தானும் பின்வாங்குவதாக இல்லை இதை சர்வதேச அளவில் கொண்டு சென்று தொடர்ந்தும் எதிராக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments