கர்தினாலின் கோரிக்கையை வழி மொழிகிறாராம் கோத்தா

உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க சுயாதீன ஆணைக் குழு ஒன்றை நியமிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது எனத் தெரிவித்து அதே கோரிக்கையை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச இப்போதுள்ள அரசிடம் முன்வைத்துள்ளார்.

இன்று (25) வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்த விடையத்தை தெரிவித்தார்.

மேலும் கர்தினாலின் இக் கோரிக்கையை தான் ஆட்சிப் பீடத்திற்கு வந்தவுடன் நிறைவேற்றவுள்ளேன் என்று கோத்தாபய சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments