கொலை சாட்சியம் மறைப்பு; குற்றப்பத்திரிகை தாக்கல்

கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலகரட்ண முன்னிலையில் இன்று (27) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் சந்தேக நபரை 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

No comments