சிறுமியை ஏமாற்றி தாயாக்கியவருக்கு மறியல்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி 3 மாதம் கர்ப்பிணியாக்கிய 23 வயதுடைய சந்தேக நபரை இம்மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தந்தையின் பராமரிப்பிலே குறித்த சிறுமி இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments