ஊழல் குற்றவாளிக்கு தண்டனை வழங்கி உடனடி விடுதலை


இன்று (20) மதியம் ஓரண்டுச் சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகிய சதொசவின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2002ம் ஆண்டில் இடம்பெற்ற அரசி ஒப்பந்தம் தொடர்பிலான ஊழல் மோசடியில் குற்றவாளியாக காணப்பட்ட நிலையில் இந்தத் தண்டனையுடன் அவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதாக தெரிவித்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments