ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போகும் ஸ்ரீபொபெ - கோத்தாவா வேட்பாளர்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளது. 

இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட உள்ளது. 

இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. 

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதர் கோத்தாபய ராஜபக்கசவின் பெயரை அவரது சகோதரரும் எதிர்க் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments