சேலையில் புத்தர் இருந்ததால் கைதாகிய பெண்! தேரர் அடாவடி

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண் ஒருவர் இன்று (29) திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

இதன்போது பெண்ணின் சேலையில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த தேரர் உள்ளிட்ட சிலர் அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்னர். சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் வந்த நிலையில், புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணும், மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments