காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி? நாளை மாபெரும் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான நாளை (30) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் வடக்கு, கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, வடக்கில் வவுனியா - பன்றிகொய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பித்து ஒமந்தை இராணுவச்சாவடி வரையிலும், கிழக்கில் கல்முனை - தரவளை பிள்ளையார் ஆலய முன்றலில் காலை 10 மணிக்கு ஆரம்பித்து கல்முனை தமிழ் பிரதேச செயலகம் வரையும் குறித்த பேரணிகள் நடைபெறவுள்ளது.

இப்பேரணியில் தாயகத்தில் இருக்கும் அத்தனை உறவுகளையும் மக்கள் பலம் சேர்க்கும் வகையில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் வலிந்து காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments