லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!


ஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில் (முறியடிப்புச் சமர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய (13) மாவீரர்களின் 22 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


20.08.1997 அன்று உலங்கு வானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.

|| வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்….

லெப்.கேணல் தூயமணி ( வைத்தியநாதன் சிவநாதன் – கிளிநொச்சி )
கப்டன் கற்கோடன் ( சின்னத்தம்பி சத்தியானந்தன் – மட்டக்களப்பு )
வீரவேங்கை கலைச்சுடர் (நந்தகுமாரி) ( முருகையா சிவரூபி – யாழ்ப்பாணம் )
வீரவேங்கை நிலவன் ( பரமேஸ்வரன் ஆனந்தகுமார் – யாழ்ப்பாணம் )
லெப்டினன்ட் நடனக்குமார் ( சிவஞானம் ஜெயராம் – மட்டக்களப்பு )
லெப்டினன்ட் நக்கீரன் ( கிருஸ்ணபிள்ளை சிறீஸ்வரன் – அம்பாறை )
2ம் லெப்டினன்ட் நித்தியா ( கந்தையா ராகினி – வவுனியா )
லெப்டினன்ட் மான்விழி ( தங்கவேல் ராஜி – யாழ்ப்பாணம் )
லெப்டினன்ட் திராவிடன் ( பத்மநாதன் விஸ்ணுகாந்தன் – மட்டக்களப்பு )
லெப்டினன்ட் இளமாறன்( உமேந்திரக்குருக்கள் கார்த்திகைத்தீபன் – யாழ்ப்பாணம் )
2ம் லெப்டினன்ட் வேலவன் ( ஆசீர்வாதம் சசிதரன் – யாழ்ப்பாணம் )
2ம் லெப்டினன்ட் அன்பு ( திலகேந்திரன் ஸ்ராலின் விஜயபாஸ்கர் – யாழ்ப்பாணம் )
வீரவேங்கை யாழ்மொழி ( முருகையா சிவகௌரி – கிளிநொச்சி )

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

No comments