மைத்திரிக்கு எதிராக முற்றுகைப்போராட்டம்?


மீண்டும் படையெடுத்துவரும் தென்னிலங்கை மீனவர்களது சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடலட்டை பிடிப்பு,தடை செய்யப்பட்ட வலைகளது பயன்பாடு, இழுவைப்படகுகளது பயன்பாடு என்பவை தொடர்பில் தீர்க்கமான பதில் தரப்படாவிடின் ஜனாதிபதி மைத்திரியின் யாழ்.வருகைக்கு எதிராக போராடப்போவதாக வடமராட்சி மீனவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்று பத்திரிகையாளர் சந்திப்பிலேயே வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சம்மேளனப்பிரதிநிதிகள் இதனi தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரங்கள் தொடர்பில் ஏற்கனவே பல தடைவ ஜனாதிபதி உள்ளிட்டவர்களதும்,மீன்பிடி அமைச்சரதும் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வருடங்கள் கடந்த பின்னரும் எந்த தீர்வுமில்லை.

படையெடுத்து வருகின்ற தென்னிலங்கை மீனவர்கள் இப்போதும் பிரபாகரன் இருப்பதாக நினைக்கிறீர்களோ என நையாண்டி செய்கின்றனர்.
நாம் இனியும் நட்டாற்றில் நிற்கமுடியாது.

ஏதிர்வரும் 30ம் திகதி பருத்தித்துறை துறை முக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தருமிடத்து எமது எதிர்ப்பினை நிச்சயம் வெளிப்படுத்துவோம்.

வடக்கிலுள்ள மீனவ அமைப்புக்களை ஒன்று திரட்டி ஜனாதிபதி அந்நிகழ்வில் பங்கெடு;ப்பதை தடுப்போமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments