பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் அங்குரார்ப்பணம்

வவுனியா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் இன்று(31) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி ஆலய திருமண மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலத்தை போசகராக கொண்டு நிர்வாக கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தலைவராக மா.கதிர்காமராஜாவும், செயலாளராக செ.சபாநாதனும், பொருளாளராக கோ.ஸ்ரீஸ்காந்தராஜாவும், உப தலைவராக செ.சந்திரகுமாரும், உப செயலாளராக மாணிக்கம் ஜெகனும், நிர்வாக சபை உறுப்பினர்களாக ரி.கே.இராஜலிங்கம், க.கிருபாகரன், அ.சூரியகுமார், ந.கபில்நாத், சு.ஜெயச்சந்திரன், தி.செல்வநாதன், வீ.ஜெகசோதிநாதன், சி.வரதராஜ் ஆகியோரும் கணக்காய்வாளராக ஓய்வுநிலை கிராம சேவையாளர் செல்வராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments