சஜித் புகழ்பாடிய அமீர் - சிறுபான்மை சமூகம் விரும்பும் ஜனாதிபதி வேண்டும் என்கிறார்


சஜித் பிரேமதாச போன்ற இளைஞனை நாட்டிற்கு தலைவனாக கொண்டுவர வேண்டிய பொறுப்பு எங்களிடத்தில் இருக்கின்றது என்று இன்று (03) மட்டக்களப்பு - கல்குடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

மேலும்,

தற்போது வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்ற தேர்தலாகும். சிறுபான்மை சமூகம் விரும்புகின்ற ஒரு தலைவனைத்தான், சிறுபான்மை சமூகம் ஆதரிப்பவர் தான் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை உறுதி செய்து காட்ட வேண்டியுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஒருவரின் மகன். எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவர். எனவே எதிர்காலத்தில் எங்களுக்கு தலைமை தாங்குவார் என்ற நம்பிக்கை எங்களிடத்தில் இருக்கின்றது. உங்களிடத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

எதிர்தரப்பினர் மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்குள்ளே முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவர் என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறுபான்மை சமூகத்தினர் அதிகப்படியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

No comments