பிக்பாஸ் வீட்டை உடைக்க வேண்டும்; அமீர் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டை உடைக்க வேண்டும் போல் இருந்தது ஏனெனில் மிகப்பெரிய நான் வியந்துபார்த்த சேரன் அவரின் நிலைகண்டு வேதனையாக இருக்கிறது என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
ஆரி நடித்துள்ள 'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட  வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசும்போதே

 பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார், அதில் சேரன் பங்குபெற்றிருப்பது குறித்தும் பேசினார். “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். உதவி இயக்குநராக இருந்ததிலிருந்து அவரை நான் பிரமிப்பாக பார்த்து வருகிறேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று அவரை வரவேற்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும், அந்த அரங்கை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். பொருளாதார காரணங்களுக்காக அவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு செல்கிறேன் என கிளம்பும்போது சொன்னதால் அவரை தடுக்கமுடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று கூறினார்.

No comments