ஒபாமாவின் தயாரிப்பில் வெளியான முதல் படம்;

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அவரது துணைவியாரும் American Factory எனும்  ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

General Motors நிறுவனத்தின் ஆலை ஒன்றை சீன நிறுவனம் ஒன்று பெற்றுக்கொண்டதைப் பற்றிய கதை படமாக்கப்பட்டுள்ளது.
Higher Ground எனும் ஊடகத் தயாரிப்பு நிறுவனத்தைத் ஒபாமாவும் அவரது துணைவியாரும் கடந்த ஆண்டு தொடங்கினர்.
அந்த நிறுவனமும் Netflix நிறுவனமும் இணைந்து வெளியிட்டிருக்கும் முதல் தயாரிப்பு அந்த ஆவணப்படமாகும்.
நேற்று அது Netflix-இல் வெளியிடப்பட்டது.
2008ஆம் ஆண்டு பொருளியல் மந்தநிலையின்போது ஒஹாயோ மாநிலத்தில் அந்த ஆலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை இந்த ஆவணப்படம் சித்திரிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments