தான் திறந்துவைத்த கட்டிடத்துக்குள்ளேயே கைதியாக சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்றிரவு  டெல்லியிலுள்ள அவரது வீட்டு சுவரேறிக் குதித்து அதிரடியாகக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் கொண்டு சென்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் சிபிஐ தலைமை அலுவலகக் கட்டடம் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அப்போதைய உள் துறை அமைச்சராக இருந்த  ப.சிதம்பரம்தான் திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments