எல்லயில் கோர விபத்து ஒரே குடும்பத்தில் இருவர் பலி

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
எல்ல – கபரகல பிரதேசத்தின், ராவின்ன என்ற இடத்தில் சுமார் 350 மீற்றர் அடி பள்ளத்தாக்கில் முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதுடைய தந்தையும், 8 வயதுடைய மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த 8, 12 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments