சஜித் -மைத்திரி –சந்திரிகா புதிய கூட்டு?


ஜனாதிபதித் தேர்தலில் தானே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக ரணில் விடாப்பிடியாகவுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை புதிய கூட்டிற்கான நகர்வாக பார்க்கப்படுகின்றது.

புதிய கூட்டுக்கான முயற்சிகளில் சந்திரிகா மும்முரமாகவுள்ள நிலையில் ஜக்கிய தேசியக்கட்சியின் சஜித்தை இணைத்து சுதந்திரக்கட்சியின் கூட்டுடன் ஜனாதிபதி வேட்பாளராக்கும் திட்டம் பற்றி  தெற்கு ஊடகப்பரப்பில் பார்க்கப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் மேல் மாடியிலுள்ள ஜனாதிபதியின் அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

அமைச்சர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா? என்று கேட்டார்.

அந்தக் கேள்வியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபமடைந்தார். அவரது கோபம் அவர் அளித்த பதிலிலும் பிரதிபலித்தது.

உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை எனவும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் சந்திரிகா ஆரம்பித்துள்ள புதிய முயற்சிக்கு மைத்திரியும் ஆதரவாக நகர முற்பட்டுள்ளமை கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   

No comments