தூதுவர் பதவியேனும் வேண்டும் :மகேஸ்?

இராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றாலும் நாட்டுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற தான் தயாராக உள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு தூதுவர் பதவியின் ஊடாகவேனும் நாட்டுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அரசியலில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா? என, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலில் களமிறங்க தேவையில்லை என்றும், ஒரு கட்சியில் இணைந்து அரசியல் மேடையில் வைத்து நாட்டை காப்பாற்ற முற்படுவதைவிட, இராணுவ வீரர் என்ற அடிப்படையில் நாட்டுக்காக சேவையாற்ற தான் எப்போதுமே தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments