சஜித் இல்லாவிடின் ஆதரவில்லை:முஸ்லீம் காங்கிரஸ்!


சஜித் பிறேமதாச ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டால் மட்டுமே முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவளிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சி தலைiயால் இவ்விவகாரம் ரணிலின் காதிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் “ஜனநாயக தேசிய முன்னணி”  கூட்டணிக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.
எனினும், அந்த கூட்டம் மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

No comments