நாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்?


காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் பரிந்துரைகளை செய்தாலும் அரசின் கையிலேயே இறுதி முடிவு இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பான மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அதில் உறவினர்களினால் சில பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு அவர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் நாம் அவ்வாறான அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை செய்தோம்.எனினும் அவர்கள் தற்போதும் பதவிகளில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகமாகிய நாம் அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்.இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே உண்டு.சாதாரணமாக ஓர் பொது மக்கள் சேவகர் குர்ரமிளைத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்து முடியும் வரை தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்படுவது வழக்கம்.அதே முறைமையை இங்கும் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனம் ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கைகளில் உள்ளன.அதில் எம்மால் தலையிட முடியாது.இந்த விடயத்தில் பரிந்துரை வழங்க மட்டுமே எமக்கு முடியும்.அதற்காக நாம் பரிந்துரைகளை மட்டும் செய்யும் பணியகம் என்று கருத வேண்டாம்.இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் காணமல் ஆக்கப்பட்டவருக்கு உண்மையில் என்ன நடந்தது?என்பதை கண்டறிய முழுமையான விசாரணை செய்வதே.

அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு குற்றம் சுமத்தப்படும் தரப்புக்களை விசாரணை செய்ய முடியும்.எல்லா விடயத்திலும் தலையிட அதிகாரங்கள் இல்லாது போனாலும் சில விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்ள எமக்கு என சில அதிகாரங்கள் உள்ளன.

 எமது அலுவகத்தின் பிரதான நோக்கம் காணமல் போனவருக்கு உண்மையில் என்ன நடந்தது என தேடி விசாரணை செய்வதே ஆகும்.சிலருக்கு இந்த கடினத்தன்மை விளங்காது.ஏனெனில் காணமல் போனவரை உடனடியாக கண்டு பிடிக்க முடியாது.நாம் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணைகளை மேற்கொண்டே உண்மையை கண்டறிய வேண்டும்.வெளிநாடுகளில் உள்ள இவ்வாறான அலுவலகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

யாழ்ப்பணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக திறக்கப்பட்டதாக விமர்சிக்கின்றனர்.ஆனால் அலுவலகம் ஆடம்பரமாக திறப்பது முக்கியமில்லை.அத்துடன் சிலர் எம்மை அச்சுறுத்தும் வகையில் அலுவலகம் திறக்கக்கூடாது என அறிக்கை விட்டுள்ளனர்.எப்படியும் அலுவலகம் திறந்து விட வேண்டும் என்றே நாம் திறந்தோம் என்றார்.
எமது அலுவலகத்தினால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களினால் உங்கள் வலிகளை போக்க முடியாது.அதற்காக நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் நாம் செய்யவில்லை.எமது பணியகத்தின் பிரதான பணியாக காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே என காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பான மாவட்டச் செயலகத்தில் காணாமல் அகக்ப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.இதன போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,காணாமல் ஆக்கப்பட்டவர்களுககவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது.நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம்.ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர்.எனினும் இந்த அலுவலகத்தினை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம்.அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இலங்கை அரசு ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப் படுத்த மட்டும் திறக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது என்றார்

No comments