மோடியுடன் பேசுவாராம் ஐநா செயலாளர்; நம்புகிறது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் தொடர்ந்து இந்தியாவின் நிலைப்பாட்டில் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தொடர்ந்தும் தங்கள் கருத்துகளை தெரிவித்து , உலகின் கவனத்துக்கு கொண்டுவர முயற்சிசெய்து வருகின்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேசியுள்ளதாக கூறியுள்ளார் அவரிடம் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வதேச சமுதாயத்துக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா. அதிகாரிகள் உறுப்பு நாடுகளுக்கு விளக்கியதற்காக நன்றி தெரிவித்தேன் என்று கூறினார்.

ஐ.நா. பொதுச் செயலாளரும் பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது பதற்றத்தை தவிர்ப்பது குறித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments