காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி இந்திய அரசால் கைது!

முன்னாள் காஷ்மீர் முதல்வர்களான ஓமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு இரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ம் சட்டப்பிரிவு இன்று ரத்து செய்யப்பட்டதையடுத்து முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் இந்திய மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இன்னும் பலர் கைது செய்யலாம் என்று இந்திய உடகங்கள் கூறுகின்றது.

No comments