வெறுப்பேத்திய இந்தியா; கைலாஷ்க்கு தடை போட்டது சீனா! இடைநடுவில் பக்தர்கள்.

காஷ்மீர் நிலவரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்ட நிலையில்,
இந்திய அரசு ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக  இரத்து செய்து, காஷ்மீரை மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரிக்க அரசாங்கம் முடிவெடுத்ததோடு லடாக் பகுதியையும் காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது. இந்த பிரதேசம் சீன எல்லைப் பகுதியில் இருப்பதனால் இந்தியாவின்  ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் சீன எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக புதன் கிழமையன்று  கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்லவிருந்த இந்தியர் குழுவிற்குசீன விசாக்கள் இல்லை என்று அறிவித்துள்ளதால் பக்தரகள் இடைநடுவில் பரிதவிப்போடு உள்ளனர்.
சிவன் வாழும் இந்துக்களின் புனித இடமாக கருதப்படும் கைலாய மலையை தரிசிக்க சீன முட்டுக்கட்டை போட்டுள்ளது இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, எனினும் இது இந்திய அரசின் தான்தோன்றித்தன்மான செயற்பட்டால் வந்த விளைவாகவே இதை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

No comments