ரணிலின் பொறியுள் தமிழரை தள்ளும் தமிழரசு!


தமிழர் இனப்பிரச்சினை தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு ஒற்றையாட்சி , பௌத்த மதத்துக்கு முன்னுரிமையினை வழங்கும் அரசியலமைப்பு என்பதனை ரணில் யாழில் வைத்து தெரிவித்துள்ளதனை கூட்டமைப்பு வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த ரணிலிடம் தமிழ் மக்களிற்கான தீர்வை வெளிப்படுத்த சுமந்திரன் கோரியிருந்தார். 

அப்போதே அரசியலமைப்பு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு வெளிப்படையாக சிறிது காலத்துக்கு முன்னர் தென்னிலங்கையில் வைத்து ரணில் அறிவித்த போது ஒற்றையாட்சி , பௌத்த மதத்துக்கு முன்னுரிமையென தெரிவித்திருந்தார்.

அதனை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டிருந்ததாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது யாழில் வைத்து அதனை ரணிலின் வாயால் சொல்லவைத்து தமிழ் மக்களது அங்கீகாரத்தை பெற சுமந்திரன் காய் நகர்த்தியமை அம்பலமாகியுள்ளது.

தமிழீழம் கேட்டு கோரி போராடிய தமிழ் மக்களை ரணிலின் ஒற்றையாட்சி , பௌத்த மதத்துக்கு முன்னுரிமை நிலைப்பாட்டிற்கு முண்டுகொடுக்க தமிழரசு முற்பட்டுள்ளமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

No comments