வடக்கு ஆளுநரில் மாற்றமில்லை!


வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் தொடர்ந்தும் வடக்கு ஆளுநராக பணியாற்றுவார் என பிந்திய கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.தெற்கில் ஆளுநர்களது மாகாணங்கள் மாற்றப்பட்டுள்ள போதும் வடக்கு ஆளுநர் கதிரையில் தொடரவுள்ளார்.

மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

ஊவா மாகாண புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும் மத்திய மாகாண புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும் தென் மாகாண புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

No comments