சர்ச்சைக்குரிய வைத்தியரின் அடிப்படை மீறல் மனு மீதான விசாரணை செப்டம்பரில்


தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக குருணாகலை மாவட்ட வைத்தியர் ஷாபி ஷியாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை செப்டம்பர் மாதம் 27ம் திகதி வரையில் ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரான வைத்தியர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, குறித்த மனுவை திருத்தம் செய்வதற்காக ஒரு நாள் கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் குறித்த மனுவை திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை 27 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அன்றைய தினம் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments