சிவரூபன் இன்றிரவு கொழும்பிற்கு?


நேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டு செல்லப்படவுள்ளார்.

பிந்திய தகவல்கள் பிரகாரம் ஆனையிறவில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாத தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

யாழ்.போதனாவைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியாக இருந்திருந்த அவர் அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த கொலைகள் மற்றும் சித்திரவதைகள் பலவற்றினையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பழிவாங்கும் வகையில் கைது இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் யாழில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் இன்றிரவு கொழும்பிற்கு மேலதிக விசாரணைகளிற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவருகின்றது. 

No comments