வரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்?


தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந்த விடுதலைப் போராட்டத்தை தாங்கள் எல்லாம் தான் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சொல்ல மறந்துவிட்டார் எனக் கடுமையாக வரதராஐப் பெருமாளைச் சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறானவர்கள் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஐப் பெருமாள் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய ஆதரவு கோட்டபாய ராஐபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தைக் கூறியிருக்கின்றார். எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்களைப் பொறுத்தவரையில் வரப்போகின்ற ஐனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற மற்றும் அறிவிக்கப்படக் கூடிய என்று பெயர்கள் அடிபடுகின்ற நபர்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறானவர்கள். 
தமிழ்த் தேசத்தினுடைய இருப்பிற்கு மாறானவர்கள். இவர்களில் யார் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. நிச்சயமாக அவர்கள் தமிழ்த் தேசத்திற்கு எதிராகவே செயற்படுவார்கள். ஆகையினால் எந்தவொரு வேட்பாளரையும் தெரீவு செய்வதான முடிவிற்கு தமிழ் மக்கள் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. 

இந்த இடத்திலே வரதராஐப் பெருமாள் அவர்கள் மக்களை தம் பக்கம் ஈர்க்கின்ற நோக்கத்தோடு தன்னுடைய கருத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது தாங்கள் எல்லாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மட்டும் போராடவில்லை தாங்களும் போராடியவர்கள் என்று ஏதோ போலித் தோற்றமொன்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படுகின்றார்.

அதற்கு உதாரணமாக தான் தமிழ் மக்களுக்காக போராடியவர், சிறிதரன் தமிழ் மக்களுக்காக போராடியவர் சுரேஸ்பிரேமச்சந்திரன். கருணா, பிள்ளையான், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் எல்லாமு; தமிழ் மக்களுக்காகப் போராடியவர்களாம் என்று ஏமாற்று நாடக கருத்தைக் கூறியிருக்கின்றார். 

ஏங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு விடயத்தை மறந்து விட்டார் என்றே கூறுகின்றொம். அதாவது தாங்கள் எல்லாம் இந்த விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டார். 30ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய பொழுது இவர் உட்பட இவர் குறிப்பிட்ட அத்தனை தரப்புக்களும் இந்திய மற்றும் இலங்கை இரானுவத்தோடு இணைந்து இந்த விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்து சொந்த மக்களைக் கடத்திக் கொலை செய்து கப்பம் பெறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தான். 

ஆகவே இவர்கள் தாம் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூறுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள் உலகத்திலே விடுதலைக்காக போராடுதல் என்பது அடக்குமுறை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் அந்த அரசினுடைய பிடியில் இருந்து விடுபட போராடவது தான் விடுதலைப் போராட்டமே தவிர அடக்குமறையாளர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுடப்பதும் அவர்களோட சேர்ந்து கொலைகளைச் செய்வதும் கப்பம் பெறுவதும் ஒரு போதும்; விடுதலைக்காக போராடுதல் என்று அர்த்தம் அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.

No comments