மிகக்கொடுமையான சட்டங்கள் பாயப்போகிறது! வைகோ எச்சரிக்கை.

மிகக் கொடுமையான சட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படப்போகிறது என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை கூறியுள்ளார். கட்சி தலைமையகமான தாயகத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக உடகவியாலர்களை சந்தித்திருந்தார்.

இதன்போது அண்மையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தால் தமிழகத்தில் தடா. பொடா போன்ற சட்டங்களை விட மிகக் கொடுமையான சட்டங்களால் அரசுக்கு எதிரான போராட்டங்களும் செயல்ப்படுகளும் முடக்கப்பட்டு பலரை கைது செய்து சிறையில் அடைக்குக்ம் நிலையை மத்திய அரசு மேற்கொள்ளல்லாம் என எச்சரித்துள்ளார்.

மேலும் தாம் அணுக்கழிவு மையம் அமைத்தல் , எழுவர் விடுதலை ,நியுற்றினோ திட்டம் ,நீட் தேர்வு போன்ற தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன் , பாராளுமன்றிலும் குரல் கொடுப்பேன் என உறுதியளித்தார்.

மேலும் அவர் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக உடகவியலார்களுக்கு அளித்த காணொளி 

No comments