பிரித்தானியா, அமெரிக்க கூட்டு குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது ஈரான்.

கப்பலுக்கு ஈரானிய படகுகள் தொல்லை கொடுத்ததாக பிரித்தானியா அமெரிக்க அதிகாரிகள் தரப்பு கூறிய குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகின.
இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஹர்முஸ் ஜலசந்தியில் பிரித்தானிய  எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையை சேர்ந்த 3 கப்பல்கள் மறித்ததாக கூறப்படுகிறது.
தங்கள் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை கப்பல்கள் தொந்தரவு கொடுத்ததாகவும் பிறகு தங்கள் கப்பலில் இருந்து ஆயுதங்களை எடுத்து குறி வைத்த பிறகு ஈரான் கடற்படை கப்பல்கள் விலகிச் சென்றதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஈரானின் கப்பல் படை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளது. ஏதேனும் கப்பல்களைக் கைப்பற்ற உத்தரவு கிடைத்திருந்தால் உடனடியாக அவற்றை நிறைவேற்றியிருக்கும் என கூறி உள்ளது. இந்த நிலையில் அதிகாரப்பூர்வ பார்ஸ் செய்தி நிறுவனம் கடற்படையிலிருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அன்னிய படகுகள், குறிப்பாக பிரித்தானிய கப்பல்களுடன் மோதல் இல்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments