வீடுகள் வேண்டும்; பாரிஸ் நகரில் அகதிகள் போராட்டம்.

பிரான்ஸ் தலைநகர் மத்திய பாரிஸில் நூற்றுக்கணக்கான  சட்டவிரோதமாக ஆவணமின்றி  குடியேறியவர்கள் தங்கள் வதிவிட அந்தஸ்தை நிரந்தரமாக்குவது பற்றி பிரதம மந்திரியுடன் பேச்சுவார்த்தை  நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென 700க்கு மேற்பட்ட அகதிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

 "பிளாக் வீஸ்ட்ஸ் " என்று அழைக்கப்பட்ட பாரிஸ்-புலம் பெயர்ந்த சங்கம் எனும் பெயரினால் ஒருங்கிணைக்கப்பட்ட  போராட்டத்தில் கறுப்பினத்தவர்களே கலந்துகொண்டனர் ,
முக்கிய நகரம் என்பதால் கூடியிருந்தவர்களை காவல்துறையின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவந்தனர்.

அங்கு போராடியவர்கள் தங்கள் வதிவிடத்துக்கான ஆவணங்கள் மற்றும் வீடுகள் வேண்டும் என்று கோசங்களையும் பதாகைகளையும் வைதிருந்த்தமை குறிப்பிடத்தக்கது.
No comments