நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்!

ஈரானுடன்  செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்மேகம் சூழ்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. எனினும் அவ்வப்போது பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் பல்வேறு நாடுகளினால் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் “நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்கி, திணிக்கப்பட்ட பொருளாதார அழுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஒப்பந்தத்திற்கு திரும்பினால்,நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்றார்.

No comments