தருமபுரம்:சந்திரகுமாரிற்காக பலியாடாக்கப்படும் மக்கள்?


தன்னை தொடர்ந்து அமைச்சராக இருக்கவிட்டிருந்தால்  வடக்கினை பொன்னாடு ஆக்கியிருக்க முடியுமென முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஒப்பாரி வைத்துவரும் நிலையில் கிளிநொச்சி தருமபுரத்தில் அவரது சாதனையொன்று வெளிவந்துள்ளது.

1958 இல் தென்பகுதியில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வன்முறையினால் பாதிக்கப்பட்டு வந்த மலையக மக்களே இங்கே முதலில் குடியேற்றப்பட்டனர். அப்போது (1958) கட்டப்பட்ட மருத்துவமனையிலேயே இன்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குப் பிறகு எந்தப் புனரமைப்பும் இங்கே மேற்கொள்ளப்படவில்லை. உதாரணமாக மருத்துவர்களுக்கான கழிப்பறை வசதிகளே இல்லாத நிலையே காணப்படுகிறதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மருத்துவமனையை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் 2013, 2014 இல் கிடைத்திருந்தன. ஒதுக்கப்பட்டிருந்த காணியைச் சில தனிநபர்கள் அத்துமீறி அபகரிப்புச் செய்திருந்ததால் அந்த வாய்ப்புகள் இழக்கப்பட்டன. எனினும் அந்தக் காணிகளை மீட்பதற்கான நடவடிக்கையை கண்டாவளைப் பிரதேச செயலர் அந்த நாட்களில் ஈடுபட்டிருந்தார். இதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பில் இது தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சு முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சரை அப்போதைய கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தன்னுடைய செல்வாக்கினால் திசை திருப்பியதால் அந்தக் காணியை மருத்துவமனை இழக்க வேண்டியேற்பட்டது.

இதற்குப் பிறகு மிஞ்சிய காணியில் சிறிய அளவில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டப்பட்டது. ஆனால், இது தருமபுரம் பிரதேச மக்கள் தொகைக்குப் போதாது. அப்படியிருந்தும் இந்த வெளிநோயாளர் பிரிவு நிர்மாணிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் திறந்து இயக்கப்படவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவு பிரதேசமென்ற வகையில் சிறீதரனின் பணிப்பில் இத்தகைய குழப்பங்கள் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.


No comments