கிடைத்தது வாய்ப்பு! சீமானுக்கு இனி ஏறுமுகமே...

பணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்  அதிமுக, திமுக ,மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து களத்திலும் பிரச்சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் தேர்தலில் போட்டியிடாது பின்வாங்கியுள்ளனர்.


பின்வாங்கிய தினகரனும், கமலஹாசனும் பல்வேறு காரணங்களையும் விளக்கங்களையும் கொடுத்தாலும் அவர்களின் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையே காரணம் என தமிழக தகவல்கள் கூறுகின்றது.

தினகரனின் அமமுக தேர்தலில் இருந்து ஒதுங்கியது கடந்த தேர்தலில் எதிர்பார்த்திராத வெற்றி கிடைக்காததினால் கட்சியின் பல்வேறு முக்கிய நபர்கள் அதிமுகவுக்கும் , திமுகவுக்கும் சென்று ஐக்கியமாகிவிட்டனர். இதன் சிக்கலினால் கட்சியை பலப்படுத்தவேண்டியும் ஒழுங்குபடுத்த வேண்டியும் இருப்பதால் பலத்தை நிரூபிக்க முடியாது என்றும் நம்பிக்கை ஏற்படுத்தும்படி பிரச்சாராம் செய்யமுடியாது என்பதே உண்மைக் காரணமாகும். 

மக்கள் நீதிமையமும் தங்கள் தகுதியை மீறி கமலஹாசன் என்ற தனிநபரின் விம்பத்தை வைத்து நிறையவே எதிர்பார்த்தார்கள் அனால் அது நடக்கவில்லை. மூன்றாம் நிலைக்கான போட்டியிலேயே ஓடினார்கள், அத்தோடு கமலஹாசன் பிக்போஸ் நிகழ்ச்சியில் இறங்கிவிட்டதால் பிரச்சராத்துக்கு போவதெல்லாம் சிரமம் என்று கூறபடுகிறது, தொண்டர்களை கருத்து கேட்டதால் நீங்கள் (கமலஹாசன்) இன்றி பிரச்சாரம் செய்தால் தமக்கு வாக்குகள் அவளவுக்கு கிடைக்காது என்று கூறியிருக்கிறார்களாம்.
இப்படி நாங்கள் தான் மாற்று என்று கிளம்பியவர்கள் எல்லாம் ஒதுங்கிவிட நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்ற கொள்கை முழக்கத்தோடும், மாற்றம் என்பது கட்சியாக இருக்கக் கூடாது, அது தத்துவ மாற்றமாக இருக்கவேண்டும் என்ற சீமானின் பிரகடனத்தோடு முழுவீச்சோடு நடைபோடும் நாம்தமிழர் கட்சி கடந்த தேர்தலில் தனித்து நின்று 4% த்தை அண்மித்த வாக்குகளை பெற்றது. அதன் பின்னரும் நாங்கள் தனித்தே தேர்தலை சந்திப்போம் என சீமான் கூறியிருந்தார்.

அதன்படியே தற்போது நடைபெறவுள்ள வேலூர் தேர்தலில் தீபலட்சுமி எனும் வேட்பாளரை   தனித்து விவசாயி சின்னத்தில் களமிறக்கியுள்ளார் சீமான். 
தொடர் தோல்விகளை சந்தித்தாலும் கொள்கைக்காகவும் தமிழகத்தின் நன்மைக்காகவும் தொடர்ச்சியாக போராட்ட களங்களை சந்தித்து வரும் நாம்தமிழர் கட்சி  வரும் தேர்தலிலும் அதிமுக,அல்லது திமுக  இரண்டில் ஒன்றுதான் வெல்லப்போவது என்று தெரிந்தும் அரசியல் கட்சிக்கான நோக்கத்தை நிறைவேற்றவும் மக்களின் தீர்ப்புக்களை கணிக்கவும் துணிவோடு தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி தொடங்கியவர்களும் , வாக்குகளை சிதறச் செய்யவும் தொடங்கப் பட்ட கட்சிகள் என்பதால் தான் தினகரனும் ,கமலஹாசனும் இந்த தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள் , சீமான் பொருளாதார ரீதியாக கட்சி சிக்கலில் இருந்தாலும் தங்களின் வெற்றி தோல்விகளையும் தாண்டி ஒரு கட்சியின் நடைமுறையை பின்பற்றுகிறார் , அதேவேளை தினகரன் , கமலஹாசன் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பது சீமானுக்கு ஒருவகையில் நன்மையையும் உள்ளது , மாற்றத்துக்காக சிதறிய வாக்குகள் இம்முறை சீமனுக்கே விழப்போகிறது. ஏற்கனவே திமுகவின் வேட்பாளர் கதிரானந்தின் மீது மக்கள் அதிர்ப்தியில்  இருக்கின்றார்கள் , அதிமுக்க வேட்பாளர் எ.சி.சண்முகம் கூட்டணிக் கட்சி என்பதால் அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒத்துழைப்பு அதிகளவு இல்லாமையினால் , நாம்தமிழர் கட்சிக்கு  வெற்றிக்கான வழியை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த கணக்கினையே நாம்தமிழரும் வைத்துகொண்டு கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

என்னவாக இருந்தாலும் மொத்தத்தில்  தினகரன், கமலஹாசன் தேர்தலை தவிர்த்தது சீமானுக்கு மேலும் ஒருபடி ஏற்றத்தையே இந்த தேர்தலில் மட்டுமல்ல , எதிர்கால்  அரசியலுக்கும் கொடுக்கவுள்ளது. ஏனெனில் நிலைத்து நிற்பது அதுவும் தனித்து நிற்பது மக்களுக்குப் பிடிக்கும்.

-பதிவுக்காக ;முகிலினி -



No comments