சிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு!
இலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையினை சேர்ந்த 50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
தம்புள்ளை, ஹபராதலாவ பகுதியில் 5 பிள்ளைகளுடன் வறிய நிலையில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்ற சந்தேக நபர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் வீட்டுக்கு பின்புறத்தில் குறித்த நபர் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளான சிறுமியின் தந்தை ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
சந்தேக நபரை பிடிப்பதற்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட மோதலின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.
10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குறித்த நபர் தனது நண்பர் ஒருவருக்கும் குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த இடமளித்துள்ளதாகவும், அந்த நண்பரும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரும் திருமணமானவர் என்றும் அவருக்கும் பிள்ளைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் மரண விசாரணைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Post a Comment