மயக்கத்தில் சம்பந்தன்:தேவதாசன் பற்றி பேச நேரமில்லையாம்?


உண்ணாவிரதம் தொடரும் தமிழ் அரசியல் கைதி கனகசபை  தேவதாசனின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் இது பற்றி கதைக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேரமில்லையென அவரது உதவியாளர் தெரிவித்துள்ளதாக விடுதலையான அரசியல் கைதியான இராமநாதன் ரமேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 11 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தோழர் தேவதாசன் மேன்முறையீடு செய்ய அனுமதி கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசோ அல்லது அதிகாரிகளோ இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இந்த நல்லாட்சி அரசை காப்பாற்றி வரும் தமிழ் தலைவர்களும் அக்கறை காட்டவில்லை. தேவதாசன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. மாறாக தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு; செய்ய அனுமதி கோரியே உண்ணாவிரதம் இருக்கிறார்.

அவருட்பட 95வரையிலான அரசியல் கைதிகள் கண்டுகொள்ளப்படாது சிறைகளிலுள்ளனர்.

எவருமே அவர்கள் விடுதலைபற்றி பேசாதிருக்கின்ற நிலையில் கூட்டமைப்பினர் எவருமே இது பற்றி பதிலளிக்காதுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்றிரசு 8மணியளவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அழைப்பெடுத்தேன். எனினும் அவர் பதிலளிக்கவில்லை.
அவரது உதவியாளரே ஜயா உணவருந்தி ஓய்வு எடுக்கிறார்.நீங்கள் கதைக்க முடியாதென தெரிவித்து இணைப்பினை துண்டித்ததாக தெரிவித்தார்.

இதனிடையே இரவு நித்திரை செல்லும் முன்னர் வழமையான இரா.சம்பந்தன் நல்ல நித்திரைக்காக விஸ்கி அருந்துவதாக சொல்லப்படுவது பற்றி தங்களிற்கு தெரியுமாவென்ற கேள்விக்கு தனக்கு அது பற்றி தெரியாதென அவர் தெரிவித்தார்.

No comments