நீராவியடிப்பிக்குவால் தொடர்ந்து பிரச்சினை?


செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளும் இந்து மத மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என பௌத்த மதகுரு ஒருவர் வர்ணித்து வருவதாக ஆலய பரிபாலன சபையினர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

அவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை நிலைமை காரணமாக 2009 ஆம் ஆண்டு பழைய செம்மலை நீரவிப்பிட்டி பிள்ளையார் ஆலயம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்பொழுது அவ்விடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ள நிலையில் நாங்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று வழிபடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் அப்பகுதியில் தங்கியுள்ள பௌத்த மதகுரு ஒருவர் எங்களுடைய வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திவருகின்றார்.

ஆலய வழிபாட்டிற்கு இந்து மக்களை அவர் பயங்கரவாதிகளாக வர்ணித்து சிங்கள மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். இது எங்களுக்கு மிக வேதனையாக உள்ளது.

செம்மலை கிராம மக்களும் அயல் கிராம மக்களும் இணைந்து ஆரம்பகாலம் தொட்டு இந்த கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 6 ம் திகதி வருடாந்த பொங்கல் உற்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளதாக ஆலயபரிபாலன சபை அறிவித்துள்ளது. இதன்போது கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் இடம்பெறவுள்ளதோடு விசேடமாக அன்றைய தினம் 108 பொங்கல் பானை வைத்து பொங்கல் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

No comments