சிறைக் கைதிகளுக்காக யாழில் கவனயீர்ப்பு;

தமிழ் அரசியல்  கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் மகளீர் அணித் தலைவி உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments