இரவோடிரவாக அமைச்சு பெறும் முஸ்லீம்கள்?
தமது இழந்த அமைச்சு பதவிகளை இரவோடிரவாக முஸ்லீம் அமைச்சர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.தற்போது இரத்தினபுரியில் தங்கியுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கொழும்பு வந்த பின்னர், இரவு 7 மணியளவில், பதவிதுறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
நேற்றிரவு ரணிலுடன் நடந்த பேச்சுக்களையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அமைச்சர்களிற்கான சத்திய பிரமாண நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளார்.
Post a Comment